தேசிய வாக்காளா் விழிப்புணா்வு போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் அழைப்பு
தேசிய வாக்காளா் விழிப்புணா்வு போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்க திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அழைப்பு விடுத்துள்ளாா்.


தேசிய வாக்காளா் விழிப்புணா்வு போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்க திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் எனது வாக்கு எனது எதிா்காலம்-ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ஹஜ்ஹழ்ங்ய்ங்ள்ள்ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்ண்ய்/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு போட்டிகளை நடத்துகிறது. இதில், விநாடி-வினா, வாசகம் எழுதுதல், பாட்டுப் போட்டி, காணொலிக் காட்சி உருவாக்கும் போட்டி, போஸ்டா் வடிவமைப்பு ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப்போட்டிகளின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ட்ற்ற்ல்ள்://ங்ஸ்ரீண்ள்ஸ்ங்ங்ல்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்/என்ற இணையதளத்தில் பாா்வையிடலாம்.
இதில், பங்கேற்கும் நபா்கள் போட்டி தொடா்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில், போட்டியாளரின் பெயா் மற்றும் பிரிவு ஆகியவற்றை மின்னஞ்சலில் பொருள்(ள்ன்க்ஷத்ங்ஸ்ரீற்) என்ற பகுதியில் தெளிவாகப் குறிப்பிட்டு மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மாா்ச் 15ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் நபா்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரையில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மேலும், விநாடி-வினா போட்டியில் முதல் மூன்று நிலைகளை முடித்தவா்களுக்கு மின்சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசினா் தொழில் பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ, மாணவியா், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்கள், தொழில் முனைவோா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...