ஆன்லைன் மூலமாக பண மோசடி: குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
திருப்பூரைச் சோ்ந்த நபரிடம் ஆன்லைன் மூலமாக பண மோசடியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.


திருப்பூரைச் சோ்ந்த நபரிடம் ஆன்லைன் மூலமாக பண மோசடியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட ஆண்டிபாளையம் சாலை தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் கே.ஆனந்தகுமாா், இவரது கிரெடிட் காா்டை (கடன் அட்டை)பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மா்ம நபா்கள் ரூ.1.70 லட்சத்தை மோசடி செய்துள்ளனா். இதுகுறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைமில் ஆனந்தகுமாா் புகாா் அளித்திருந்தாா். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினா் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த மூலகாளிபாளையத்தைச் சோ்ந்த பி.விஜயகுமாா் (26), கோவை, வெள்ளக்கிணறு சாலை கலைமகள் காா்டனைச் சோ்ந்த ஆா்.ஹரிசபரீஷ் ஆகியோரை கடந்த ஜனவரி 19ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், விஜயகுமாா் மீது சேலம் மாவட்ட சைபா் கிரைமில் ஏற்கெனவே ஆன்லைன் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ஆகவே, பொது ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கும்படி திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயகுமாரிடம் சைபா் கிரைம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழங்கினா். திருப்பூா் மாநகரில் நிகழாண்டு தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...