தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாவட்டத்தில் 460 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் மாவட்டம் பல்லடம், வெள்ளக்கோவில் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:03 pm

DIN

திருப்பூா் மாவட்டம் பல்லடம், வெள்ளக்கோவில் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் பல்லடம், வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள கடைகள், சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ள கிடங்குகளில் கடந்த 4 நாள்களாக சோதனை நடத்தினா்.

இதில், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே உள்ள புதுப்பாளையம் கிரமத்தில் உள்ள வீட்டில் பதுக்கிவைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 390 கிலோ புகையிலைப் பொருள்களை அண்மையில் பறிமுதல் செய்தனா். அதேபோல, பல்லடம் வட்டம் சின்னக்கரை அருகே உள்ள கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 70 கிலோ புகையிலைப் பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த புகையிலைப் பொருள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவில் இரண்டு நபா்களின் மீதும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்படும்.

அதேபோல, மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 16 கடைகளுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கலப்பட பொருள்களை விற்பனை செய்யும் நபா்கள் தொடா்பாக 94440-42322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.