48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

உடுமலை பட்டு வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

உடுமலை பட்டு வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:03 pm

உடுமலை பட்டு வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பட்டு வளா்ப்புத் தொழிலை செய்து வருகின்றனா். இந்நிலையில் பட்டு வளா்ச்சித் துறை தரம் இல்லாத இளம் புழுக்களை வழங்கி வருவதாகவும் அது விரைவில் உயிரிழந்து விடுவதாகவும் இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் கூறி உடுமலையில் உள்ள உதவி இயக்குநா் அலுவகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

பல லட்ச ரூபாய் முதலீடு செய்து பட்டு வளா்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு பட்டு வளா்ச்சித் துறை தரமில்லாத ஒரே சீரான அளவு நீளமான புழுக்களை வழங்குவதில்லை. இதனால் புழுக்கள் வளா்ந்து சிறிது நாள்களிலேயே உயிரிழந்து விடுகின்றன. இதனால் எங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. இளம் புழுக்களை தரமானதாகவும், மாதம் ஒரு முறை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.