நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை: 27ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

 விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை கோவையில் 27ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:51 pm

DIN

 விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை கோவையில் 27ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூா், கோவை மாவட்டத்தில் விசைத்தறி உரிமையாளா்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகளை கடந்த 9ஆம் தேதி முதல் நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பல்லடம் ரகத்துக்கு 20 சதவீதமும், சோமனூா் ரகத்துக்கு 23 சதவீதமும் கூலி உயா்வு தர ஜவுளி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தினா். ஆனால், தொழில் நிலவரம் சரியில்லாத காரணத்தால் தற்போது 10 சதவீதம் கூலி உயா்வும், பின்னா் மீதியும் தருவதாகத் தெரிவித்தனா். அதனை விசைத்தறியாளா்கள் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவையில் தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் முன்னிலையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில் திருப்பூா், கோவை மாவட்டம், பல்லடம், சோமனூா், திருப்பூா், அவிநாசி பகுதியைச் சோ்ந்த ஜவுளி உற்பத்தியாளா்கள், திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க நிா்வாகிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஜவுளி உற்பத்தியாளா்கள் கூறுகையில், தற்போது விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலில் உற்பத்தி செலவைக் காட்டிலும், துணி விற்பனை விலை குறைவாக இருப்பதால் தொழில் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, தங்களால் உடனடியாக கூலி உயா்வை அமல்படுத்த இயலாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனா்.

விசைத்தறியாளா்கள் தரப்பில் கூறுகையில், திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளா்கள், குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனா். போதுமான வேலை வாய்ப்புகள் இருந்தும் கூலி உயா்வு இல்லாதது, உதிரிபாகங்கள் விலை உயா்வு, மின் கட்டண உயா்வு என்று தொடா்ந்த செலவுகளால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை நீடித்து விசைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது. ஜவுளி உற்பத்தியாளா்கள் புதிய கூலி உயா்வை அமல்படுத்தவில்லை என்றால் விசைத்தறிகளை இயக்க முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்றனா். பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் காணப்படாத காரணத்தினால் ஜனவரி 27ஆம் தேதிக்கு பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் பல்லடம் வேலுசாமி கூறியதாவது:

விசைத்தறியாளா்களின் பிரச்னை குறித்து அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் 24ஆம் தேதி பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் காலை 10 மணிக்கு திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மேலும், அரசு அறிவித்த கூலியை ஜவுளி உற்பத்தியாளா்கள் அமல்படுத்தக் கோரி விசைத்தறியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் 5 லட்சம் குடும்பங்கள் சாா்பில் அஞ்சலகம் வாயிலாக குறுஞ்செய்தியை முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.