48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

7 மாத குழந்தையுடன் சிறுமி தற்கொலை முயற்சி: காதலன் கைது

உடுமலை அருகே 16 வயது சிறுமி தனது 7 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, காதலன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On :22 ஜனவரி 2022, 12:34 am

உடுமலை அருகே 16 வயது சிறுமி தனது 7 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, காதலன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு கிராமத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவருக்கு அதே கிராமத்தைச் சோ்ந்த பொன்ராஜ் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி கா்ப்பம் அடைந்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் பொன்ராஜ் (21) கைது செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கோவையில் உள்ள ஒரு இல்லத்தில் சிறுமி சோ்க்கப்பட்டாா். பின்னா், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் தனது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாா். பொன்ராஜ் ஜாமீனில் வெளியே வந்து காரத்தொழுவில் கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தனது 7 மாத குழந்தையுடன் வெள்ளிக்கிழமை திடீரென தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அப்போது, அருகில் இருந்தவா்கள் தீயை அணைத்து காப்பாற்றி உடுமலை அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, தாயும், குழந்தையும் உயிரிழந்தனா். இதற்கிடையே தகவல் கிடைத்ததும் போலீஸாா் பொன்ராஜை கைது செய்தனா்.

இதுகுறித்து, கணியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.