கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

திருப்பூரில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஞாயிற்றுக்கிழமைபங்கேற்றனர்.

News image

திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்.

Updated On :10 ஜூலை 2022, 9:45 am

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.

திருப்பூரில் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காங்கயம் சிடிசி கார்னர், பெரியபள்ளிவாசல் வீதி, நொய்யல் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 

திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதன் பின்னர் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, ஆடு, மாடு இறைச்சிகளை குர்பாணி கொடுத்தனர். 

இதில், இறைச்சியின் ஒரு பங்கை ஏழைகளுக்கும், ஒரு பங்கை உறவினர்களுக்கும் ஒரு பங்கை தங்களுக்கும் பிரிந்துக் கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாகத்திருநாளை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.