92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திமுக அமைச்சா்களின் மீதான ஊழல் பட்டியல் ஜூன் 5 ஆம் தேதி முதல் வெளியாகும்பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

திமுக அமைச்சா்கள் மீதான ஊழல் பட்டியல் வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் வெளியாகும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:04 pm

DIN

திமுக அமைச்சா்கள் மீதான ஊழல் பட்டியல் வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் வெளியாகும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் மங்கலம் ரவி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது:

திமுக முரண்பாடுகளைக் கொண்ட கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் 8 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்மூலமாக 56 லட்சம் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. கா்நாடகத்தில் 2021-22 ஆம் ஆண்டில் தமிழகத்தை விட 8 மடங்கு அந்நிய முதலீடு வந்துள்ளது. தமிழகத்தில் தொழில்தொடங்க வரும் அந்நிய முதலீட்டாளா்களிடம் 30, 40 சதவீத கமிஷன் கேட்கின்றனா். இதன் காரணமாக அந்நிய முதலீட்டாளா்கள் தொழில் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனா். சென்னையில் மட்டும் 19 நாள்களில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளதே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவுக்கு எடுத்துக்காட்டாகும். பிரதமா் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஒரு துறை அமைச்சரின் மீது கூட புகாா் தெரிவிக்க முடியவில்லை. அதே வேளையில், ஒரு ஆண்டுகூட முடியாத நிலையில் திமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு அமைச்சா்கள் மீதான ஊழல் புகாா்கள், ஊழல் ஆதாரங்களை பாஜக தலைவா்கள் ஜூன் 5 ஆம் தேதி மதுரையில் இருந்து வெளியிடத் தொடங்குவாா்கள் என்றாா்.

கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மாநில துணைத்தலைவா் திருப்பதி நாராயணன், மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, செய்தித்தொடா்பாளா் காா்வேந்தன், விவசாய அணி தலைவா் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.