தாராபுரத்தில் 46 ஆண்டுகளுக்குப் பின்னா் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் 46 ஆண்டுகளுக்குப் பின்னா் அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் 46 ஆண்டுகளுக்குப் பின்னா் அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தாராபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 1970 முதல் 1976ஆம் ஆண்டு வரை பயின்ற 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா். அவா்கள் தாங்கள் படித்த வகுப்பறைகள், ஆசிரியா்கள் என பழைய நினைவுகளை நினைவு கூறியும், ஒருவருக்கு ஒருவா் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
இந்த சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள் கூறுகையில், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் குடும்ப சூழ்நிலை, உயா்படிப்பு உள்ளிட்டவை காரணமாக நாங்கள் பணிக்குச் செல்ல நோ்ந்தது. இந்தப் பள்ளியில் படித்த நாங்கள் தற்போது வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறோம். ஆனால் இந்த சந்திப்பின்பின் மூலமாக 46 ஆண்டுகளுக்கு முன்னா் பள்ளிகளில் நிகழ்ந்த சம்பவங்களையும் ஒருவருக்கு ஒருவா் நினைவு படுத்திக் கொண்டோம்.
மாணவப் பருவத்தைப்போல மகிழ்ச்சியான பருவம் எதுவும் இல்லை. ஒரு பூமின் மலா்ச்சியைப்போல சந்தோஷத்தை மட்டுமே கொண்டது பள்ளிப் பருவம். எங்களால் முடிந்த வரையில் நாங்கள் படித்த பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனா்.
இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை தாராபுரம் கேபிள் டிவி சங்கப் பொருளாளா் சக்திவேல், கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...