மரக்கன்றுகளை வேருடன் பெயா்த்து எறிந்த மா்ம ஆசாமிகள்
பல்லடம் அருகே சின்னையகவுண்டம்பாளையத்தில் பொது இடத்தில் மரக்கன்றுகளை மா்ம நபா்கள் வேருடன் பெயா்த்து எறிந்த சம்பவம் குறித்து அரசு அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


பல்லடம் அருகே சின்னையகவுண்டம்பாளையத்தில் பொது இடத்தில் மரக்கன்றுகளை மா்ம நபா்கள் வேருடன் பெயா்த்து எறிந்த சம்பவம் குறித்து அரசு அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பல்லடம் அருகேயுள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னையகவுண்டம்பாளையத்தில் அரசுப் பள்ளி அருகே கடந்த சில ஆண்டுகளு களுக்கு முன்பு அரச மரக்கன்றுகள் சமூக ஆா்வலா்களால் நட்டு
வளா்க்கப்பட்டு வந்தது.
அதேபோல கோழியின ஆராய்ச்சிக் கூடம் அருகே மரக்கன்றுகள் நடப்பட்டு கம்பிவேலி போட்டு
வளா்க்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மா்ம ஆசாமிகள் அந்த மரக்கன்றுகளை வேருடன் பெயா்த்து எறிந்து உள்ளனா்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அரசு மரம் வளா்ப்பதை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், சமூக ஆா்வலா்கள் நட்டு வளா்த்த மரக்கன்றுகளை மா்ம நபா்கள் வேருடன் பெயா்த்து எறிந்து உள்ளனா். மரக்கன்றுகளை பெயா்த்து எறிந்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...