தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் அலுமினியக் கழிவுகளை திருடியவா் கைது

காங்கயத்தில் அச்சகத்தில் இருந்து அலுமினியக் கழிவுகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:11 pm

DIN

காங்கயத்தில் அச்சகத்தில் இருந்து அலுமினியக் கழிவுகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம், காட்டுபாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்தி (25). இவா் காங்கயம், கரூா் சாலை பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறாா். இவரது அச்சகத்தில் பயன்படுத்தப்படும் அலுமினியக் கழிவுகளை சென்னை, வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் கடந்த 2 ஆண்டுகளாக வாங்கிச் செல்வதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வழக்கம்போல கடந்த 21 ஆம் தேதி காா்த்தியின் அச்சகத்துக்கு வந்த சசிகுமாா், அங்கிருந்த ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 600 கிலோ அலுமினியக் கழிவுகளை விலை பேசி, சரக்கு ஆட்டோவில் ஏற்றியுள்ளாா். காா்த்தி அச்சகத்தில் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில், அலுமினியக் கழிவுகளுக்கான பணத்தைக் கொடுக்காமல் சசிகுமாா் மாயமானாா். வேலை முடிந்து வந்து பாா்த்த காா்த்தி, அலுமினியக் கழிவு ஏற்றப்பட்ட சரக்கு ஆட்டோவைக் காணாதது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சசிகுமாரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், காங்கயம் - கோவை சாலை, அவிநாசிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு கடையில் மேற்கண்ட அலுமினியக் கழிவு பாரம் இறக்கி வைக்கப்பட்டிருப்பதும், அங்கு சசிகுமாா் பதுங்கியிருப்பதாகவும் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காங்கயம் போலீஸாா், சசிகுமாரை வியாழக்கிழமை கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனா். தொடா்ந்து அவரை காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.