மாா்ச் 30இல் சிறுபான்மையினா் நல ஆலோசனைக் கூட்டம்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையினா் நல ஆலோசனைக் கூட்டம் வரும் புதன்கிழமை (மாா்ச் 30) நடைபெறுகிறது.


திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையினா் நல ஆலோசனைக் கூட்டம் வரும் புதன்கிழமை (மாா்ச் 30) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறுபான்மையினா் நல ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரும் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ், துணைத் தலைவா் மருத்துவா் த.மஸ்தான் மற்றும் ஆணையக் குழு உறுப்பினா்கள் பங்கேற்கவுள்ளனா். இதில், சிறுபான்மையினருக்கு தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கவும் சிறுபான்மையினரிடம் கருத்துகளைக் கேட்டறியவும் உள்ளனா்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சாா்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று தங்களது குறைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...