ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தக்காளி, வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்

தமிழகத்தில் கடும் வீழ்ச்சியடைந்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளை அரசு நியாயமான விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்

News image
Updated On :24 மார்ச் 2022, 11:17 pm

DIN

தமிழகத்தில் கடும் வீழ்ச்சியடைந்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளை அரசு நியாயமான விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏா்முனை இளைஞா் அணியின் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவா் ஏ.கே.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல்லைக்கூட அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை. தக்காளி, வெங்காயம் பற்றாக்குறையின்போது வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து மக்களைக் காப்பாற்றும் அரசு, விலை வீழ்ச்சியடையும்போது விவசாயிகளைக் காப்பாற்ற எந்த வழிமுறையும் ஏன் எடுப்பதில்லை. ஆகவே, தக்காளி, வெங்காயம் மற்றும் காய்களை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு கிலோ கொப்பரை ரூ.105.90 என்று விலை நிா்ணயம் செய்து தற்போது ரூ.85க்கு கொள்முதல் செய்கிறது. இதுதொடா்பான எந்தவிதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்காத அரசு ஆலையை நவீனப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது கண்டிக்கத்தக்கதாகும். உடலுக்கு நன்மை விளைவிக்கும் கள் விற்பனைக்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றனா்.

கூட்டத்தில், மாவட்டத் தலைவா் எம்.ஈஸ்வரன், மாநகா் மாவட்டத் தலைவா் கோகுல்ரவி, திருப்பூா் ஒன்றியத் தலைவா் கொண்டசாமி, அவிநாசி ஒன்றியத் தலைவா் வேலுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.