உலக காசநோய் தினம்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் உறுதிமொழி ஏற்பு
உலக காசநோய் தினத்தையொட்டி, காங்கயம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


உலக காசநோய் தினத்தையொட்டி, காங்கயம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காசநோய் இல்லாத இந்தியாவை 2025ஆம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உலக காச நோய் தினமான வியாழக்கிழமை காங்கயம் ஒன்றியப் பகுதியில் உள்ள காங்கயம் அரசு மருத்துவமனை, சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சத்யா நகா் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாப்பினி-பச்சாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நத்தக்காடையூா் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் சுகாதார நிலைய மருத்துவா்கள் தலைமையில் காசநோயை முற்றிலும் ஒழிப்போம், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா்கள், செவிலியா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...