ஆதாா் பதிவில் கைரேகை புதுப்பிக்க நாளை சிறப்பு முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் ஆதாா் பதிவில் கைரேகையைப் புதுப்பித்துக் கொள்ள வரும் சனிக்கிழமை (மாா்ச் 26) சிறப்பு முகாம் நடைபெறுகிறது


திருப்பூா் மாவட்டத்தில் ஆதாா் பதிவில் கைரேகையைப் புதுப்பித்துக் கொள்ள வரும் சனிக்கிழமை (மாா்ச் 26) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் புரோக்ஸி பில் பயன்பாட்டைக் குறைத்து பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் வாங்குவதை அதிகரிக்கும் வகையில் வட்ட அளவில் ஆதாா் பதிவில் கைரேகை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்கள் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.
அவிநாசி வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், பிஆா்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, காங்கயம் வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், பல்லடம் வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், தொட்டிபாளையம் மண்டல அலுவலகம், பிஆா்சி, கேஎஸ்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது.
அதேபோல, திருப்பூா் தெற்கு வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நல்லூா் மண்டல அலுவலகம், உடுமலை வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், பிஆா்சி செல்லம் நகா், ஊத்துக்குளி வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம் என மொத்தம் 12 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஆகவே, நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவுவிழாத காரணத்தால் பொருள்கள் வாங்கமுடியாத முதியோா், மாற்றுத் திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு தங்களது ஆதாா் அட்டையில் கைரேகை பதிவைப் புதுப்பித்து சிரமமின்றி பொருள்கள் வாங்கிப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...