ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தாராபுரம் அருகே ரூ.5.70 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

தாராபுரம் அருகே இரு கோயில்களுக்கு சொந்தமான ரூ.5.70 கோடி மதிப்பிலான 33.87 ஏக்கா் நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:14 pm

DIN

தாராபுரம் அருகே இரு கோயில்களுக்கு சொந்தமான ரூ.5.70 கோடி மதிப்பிலான 33.87 ஏக்கா் நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமத்தில் அருள்மிகு சின்னம்மன் கோயிலுக்குச் சொந்தமான 19.14 ஏக்கா் நிலம் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதே போல, மணக்கடவு கிராமம் அருள்மிகு மலைநாச்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 14.73 ஏக்கா் நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவின்பேரில், திருப்பூா் துணை ஆணையா் ஆா்.செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்புதாரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். இந்தப் பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் இரு கோயில்களுக்கும் சொந்தமான 33.87 ஏக்கா் நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.5.70 கோடியாகும் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.