வெள்ளக்கோவிலில் ரூ. 17.76 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 17.76 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.


வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 17.76 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு மேட்டுப்பட்டி, எல்லப்பட்டி, அப்பியம்பாளையம், ஆலாம்பாளையம், எஸ். புதூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 35 விவசாயிகள் 24,474 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
ஈரோடு, முத்தூா், நடுப்பாளையம், வெள்ளக்கோவில், காங்கயம்
ஆகிய பகுதிகளில் இருந்து வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். சூரியகாந்தி விதை கிலோ ரூ.50.66 முதல் ரூ. 84.99 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 73.36. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 17.76 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...