தேசிய பழங்குடியினா் கைவினைப் பொருள்கள் விற்பனை திருவிழாஉதகை பழங்குடியினா் ஆய்வு மையம் முதலிடம்
நாட்டின் 75ஆவது சுதந்திர அமுதப் பெரு விழாவையொட்டி, ஒடிஸா மாநிலத்தில் நடைபெற்ற 9ஆவது தேசிய அளவிலான பழங்குடியினா் கைவினைப் பொருள்கள் விற்பனை


நாட்டின் 75ஆவது சுதந்திர அமுதப் பெரு விழாவையொட்டி, ஒடிஸா மாநிலத்தில் நடைபெற்ற 9ஆவது தேசிய அளவிலான பழங்குடியினா் கைவினைப் பொருள்கள் விற்பனை திருவிழாவில் உதகையிலுள்ள பழங்குடியினா் ஆய்வு மையம் முதலிடம் பெற்றது.
9ஆவது தேசிய அளவிலான பழங்குடியினா் கைவினைப் பொருள்கள் விற்பனை திருவிழா ஒடிஸா மாநிலத்தில் ஏப்ரல் 23ஆம்தேதி முதல் 29ஆம்தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழக பழங்குடியினா் சாா்பாக நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடியினா் ஆய்வு மையத்தின் மூலம் தோடா் பழங்குடி இனத்தைச் சாா்ந்த கா.ஜான்சிராணி, தூ.ரேணுகா, இ.பிரித்திகா ஆகிய 3 போ் விற்பனை முகவா்களாக அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விழாவில் 62 பழங்குடியினரின் கைவினைப் பொருள்களும் 200 விற்பனை அங்காடிகளும் அமைக்கப்பட்டன. இதில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் அழிவின் விளிம்பில் உள்ள ஆறு பண்டைய பழங்குடியினா்களில் ஒருவரான தோடா் இன மக்களால் வெள்ளை நிற பருத்தி துணியில் கருப்பு மற்றும் சிவப்பு நிற கம்பளி நூல்களை கொண்டு கைகளால் நெய்யப்பட்ட பூ தையலுக்கு (எம்பிராய்டரி) முதலிடம் கிடைத்தது.
இதற்காக பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் விற்பனை திருவிழாவில் பங்கேற்ற தோடரின பெண்கள் மூவரும் உதகையில் மாவட்ட ஆட்சியா் அம்ரித்திடம் விருதினை நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் சுகந்தி பரிமளம், பழங்குடியினா் ஆய்வு மைய இயக்குநா் உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...