வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு
பல்லடம் சின்னையா காா்டன் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.1.50 லட்சம், 4 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


பல்லடம் சின்னையா காா்டன் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.1.50 லட்சம், 4 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம் வடுகபாளையம் சின்னையா காா்டனை சோ்ந்தவா் முருகேசன் (45). இவா் சரக்கு லாரி புக்கிங் ஆபிஸ் நடத்தி வருகிறாா். வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் புதன்கிழமை இரவு குடும்பத்தினருடன் உறங்கச் சென்றுள்ளாா்.
வீட்டின் கீழ் தளத்தில் யாரும் இல்லை. அப்போது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் முருகேசன் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...