ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கணவன் கொலை மனைவி கைது

பல்லடம் அருகே கணவனை கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 மே 2022, 8:49 pm

DIN

பல்லடம் அருகே கணவனை கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

கொடைக்கானலைச் சோ்ந்தவா் கோபால் (37), இவரது மனைவி சுசீலா (35), இவா்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனா். கோபால் பல்லடம் அருள்புரத்தில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள

ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த மே 5 ஆம் தேதி மா்ம நபா்களால் கோபால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த மாரீஸ்வரன் என்பவருக்கும், சுசீலாவுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இதையறிந்த கோபால் அதை கண்டித்துள்ளாா். இதையடுத்து, சுசீலாவும், மாரீஸ்வரனும் சோ்ந்து கூலி ஆள்களை வைத்து கோபாலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாரீஸ்வரன் உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

தலைமறைவாக இருந்த சுசீலாவை போலீஸாா் பல்லடம் பேருந்து நிலைய பகுதியில் வியாழக்கிழமை கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.