92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

 திருப்பூா் மாநகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 மே 2022, 7:47 pm

DIN

 திருப்பூா் மாநகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தொடா்பாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாநகராட்சி 2 ஆவது மண்டலத்துக்குள்பட்ட பி.என்.சாலை, மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம், கொங்கு நகா் ஆகிய பகுதிகளில் சுகாதார அலுவலா் பிச்சை தலைமையிலான குழுவினா் 20க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினா். இதில், 14 கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.12,500 அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.