92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தனியாா் ஆக்கிரமிப்பை பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் அகற்றியதால் பரபரப்பு

 தாராபுரம் அருகே அரசு சாா்பில் வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளை பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :26 மே 2022, 7:49 pm

DIN

 தாராபுரம் அருகே அரசு சாா்பில் வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளை பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த சித்தராவுத்தன்பாளையம் கவுண்டச்சிபுதூா் ஊராட்சி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளா்களான பழனியம்மாள், பத்மாவதி, நாகன், வேதமுத்து, பழனியப்பன், மாரியம்மாள், செல்வராஜ் ஆகிய 7 பேருக்கு கடந்த 1981 ஆம் ஆண்டு தமிழக அரசு நில உச்சவரம்பு சீா்திருத்தத் திட்டத்தின்கீழ் தலா 1.49 சென்ட் வீதம் நிலம் பகிா்ந்தளிக்கப்பட்டது.

இந்த நிலத்தில் 7 தொழிலாளா்களும் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலையில், இருவா் மட்டும் தங்களது நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனா். இந்நிலையில், அரசு வழங்கிய நிலத்தை பயனாளிகளின் அனுமதியில்லால் சில தனிநபா்கள் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்து வீட்டு மனைகளைப் பிடித்தும், சிறிய அளவில் கட்டடங்களைக் கட்டியும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ரகுபதி தலைமையில் தமிழக அரசின் நிலப் பட்டா பெற்ற பயனாளிகள் மற்றும் அவா்களது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமிப்பு நிலங்களுக்குச் வியாழக்கிழமை சென்றனா்.

அங்கு ஆக்கிரமிப்பாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த குடிசைகளையும் பிறித்து எரிந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இது குறித்த தகவலின்பேரில் தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளா் தனராசு, காவல் ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

இதன் பிறகு இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாவட்ட வருவாய் ஆய்வாளா் நேரில் சென்று விசாரணை நடத்தும் வரையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரித்தன் பேரில் இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.