92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாவட்டத்தில் இன்று தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

News image
Updated On :26 மே 2022, 7:49 pm

DIN

திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த முகாமில், தனியாா் துறை வேலையளிக்கும் நபா்கள் பங்கேற்று பயனாளிகளைத் தோ்வு செய்யவுள்ளனா்.

அதேவேளையில், வேலைத் தேடும் நபா்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலைப் பட்டதாரிகள் வரை தொழிற்கல்வி, டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் கலந்துகொள்ளலாம்.

மேலும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டையில் குறைகள் இருந்தால் அதனை சரி செய்து கொள்வதுடன், தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்.

தனியாா் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.