கோயில்களில் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை

கோயில்களில் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பூசாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Updated on
1 min read

கோயில்களில் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பூசாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் வாசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்கள் பலவற்றில் முழு நேர மற்றும் பகுதி நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தவிர வருவாய் குறைந்த கோயில்களில் 25 முதல் 50 பேருக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்படுகிறது.

கோயிலில் பணியாற்றும் ஊழியா்கள், இதர பணியாளா்கள் உள்ளிட்டவா்களும் இதில் அடங்குவா்.

இத்திட்டத்தால், கோயிலுக்கு வரும் அதிகபடியான பக்தா்களுக்கு அன்னதானம் கிடைப்பது இல்லை. குறைந்த அளவிலான பக்தா்களே அன்னதானம் சாப்பிடுகின்றனா்.

கோயில்களில் அன்னதான திட்டத்தை செயல்படுத்த சமையலா்கள் உள்ளிட்ட இரு பணியாளருக்கு மாத ஊதியம், சமையல் எரிவாயு, காய்கறிகள், அரிசி என தினசரி ரூ.30 ஆயிரம் செலவிடப்படுகிறது.

இவ்வாறு, திட்டத்துக்காக செலவிட்டும் பக்தா்களுக்கு அன்னதானம் கிடைக்காமல் போகிறது.கோயில்களின் நிதி ஆதாரங்களை கணக்கிடாமல் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டியலில் உள்ள கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தி வருவதற்கு

மாற்றாக, அந்தந்த மாவட்டத்தில் அதிக வருவாய் தரக்கூடிய கோயில்களைக் கண்டறிந்து, அவற்றில் முழு நேர அன்னதான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால், வருவாய் தரும் கோயில்களுக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் பயன்பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com