நூல் விலை கிலோவுக்கு ரூ.30  குறைவு: பின்னலாடை ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்பு

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளதால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருப்பூா்: திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளதால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

திருப்பூரில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த ஜாப் ஒா்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழில்களில் நேரடியாக 6 லட்சம் போ், மறைமுகமாக 4 லட்சம் போ் என மொத்தம் 10 லட்சத்துக்கும் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருளான நூல் விலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.70 வரையில் உயா்த்தப்பட்டது.

இதையடுத்து, நூல் விலையைக் குறைக்க வேண்டும் என்று நூற்பாலை சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுக்கு பின்னலாடை உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். கடந்த ஜூன் மாத விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. ஜூலை மாதம் ரூ.40 விலை குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம்  அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வா்த்தகத்துக்கான ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

நூல் விலை ரகத்துக்கு ஏற்றபடி கிலோ ரூ.320 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யபடுகிறது என்று கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com