

திருப்பூரில் சுதந்திர நாள் விழாவின் போது கைக் குழந்தையுடன் பங்கேற்ற இளம் பெண் ஒருவர் வாரிசு சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழுத சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கனா கல்லூரி மைதானத்தில் சுதந்திர நாள் விழா நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண் தனது கைக் குழந்தையுடன் பங்கேற்றார்.
அப்போது கணவரை இழந்து தனியாக வசித்து வருவதாகவும் வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறி அழுதார்.
இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் அந்த பெண்ணிடம் சென்று வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் காரணமாக சுதந்திர நாள் விழாவில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.