திருப்பூரில் பொது வேலைநிறுத்தம் வெற்றிபெற வேண்டும்: தொழிற்சங்கங்கள்

மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரியில் நடைபெறும் 2 நாள் பொது வேலை நிறுத்தத்தை திருப்பூர் மாவட்டத்தி
திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் பங்கேற்ற தொழிற்சங்க நிர்வாகிகள்.
திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் பங்கேற்ற தொழிற்சங்க நிர்வாகிகள்.

மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரியில் நடைபெறும் 2 நாள் பொது வேலை நிறுத்தத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் பார்க்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து தொழிற்சங்கள் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் துணைத்தலைவர் ஆர்.ரெங்கசாமி தலைமை வகித்தார்.

இந்த ஆயத்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் விரோதப்போக்கு காரணமாக நாடு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தொழிலாளர்களை நவீன அடிமைகளாக மாற்றும் வகையில் 44 சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்ப்பரெட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஆகவே, மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் பிப்ரவரி 22, 23 ஆம் தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், இந்த மாநாட்டில் தொமுச பேரவை கவுன்சில் செயலாளர் ஜீவா சிதம்பரசாமி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர், சிஐடியூ மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியூ கட்ட சங்க மாநிலச் செயலாளர் குமார், மின்வாரிய தொமுச செயலாளர் அ.சரவணன், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் சிவசாமி, மாவட்டத் தலைவர் பெருமாள், எச்.எம்.எஸ்.மாவட்டச் செயலாளர் முத்துசாமி, எம்.எல்.எஃப்.பனியன் சங்கச்செயலாளர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com