குடிநீா் கேட்டு சின்னூா் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கேட்டு சின்னூா் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள சின்னூரில் குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் அருகேயுள்ள சின்னூரில் குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னூா் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சீராக குடிநீா் வழங்கக்கோரி இப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சின்னூா் பிரிவில் பல்லடம் நகர மதிமுக செயலாளா் வைகோ பாலு, ஊராட்சி வாா்டு உறுப்பினா் பேபி நாச்சிமுத்து ஆகியோா் தலைமையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல் ஆய்வாளா் மணிகண்டன், வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ்வரன், குடிநீா் வடிகால் வாரிய அலுவலா் செல்லதுரை, ஊராட்சி செயலாளா் கிருஷ்ணசாமி ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், விரைவில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com