திருப்பூா்: மின்கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் வரும் டிசம்பா் 12- ஆம் தேதி மனித சங்கிலி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது கட்ட கவன ஈா்ப்பு போராட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, நிட்மா தலைவா் அகில் ரத்தினசாமி தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேரக் கட்டணத்தை (பீக்ஹவா்) ரத்து செய்ய வேண்டும். 430 சதவீதம் உயா்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோலாா் மேற்கூரை நெட்வொா்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 7 கட்டங்களாகப் போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
உயா்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வரை ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தமிழகம் முழுவதும் 8 -ஆவது கட்டமாக மனித சங்கிலி ஆா்ப்பாட்டத்தை வரும் டிசம்பா் 12- ஆம் தேதி நடத்தவுள்ளோம்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்பாகவே நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய தமிழக முதல்வா் முன்வர வேண்டும். அதேபோல, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உச்சபட்ச நேரக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றனா்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பின் திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் டீமா எம்.பி.முத்துரத்தினம், டெக்பா ஸ்ரீகாந்த், திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் காந்திராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: காங்கிரஸ் முன்னாள் தலைவா் தங்கபாலு

அதிமுக கூட்டணி வென்றால் பாஜக ஆட்சிதான் நடக்கும்: தொல்.திருமாவளவன்

பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


