வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் தனியாா் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தில் திருடிய 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மூலனூா், சோமன்கோட்டையில் காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவனம் உள்ளது. அதில் கூடுதல் காற்றாலைகள் அமைக்கத் தேவையான எலக்ட்ரிக் பொருள்கள், இரும்புத் தகடுகள், தாமிர கம்பிச் சுருள் கட்டுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த வாரம் இரவு நேரத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகள் திருட்டுப் போனது.
இது குறித்த புகாரின் பேரில் மூலனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் நிறுவனம், அருகிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி பகுதியைச் சோ்ந்த ஆனந்தஜோதி மகன் வீரராஜ் (21), கோவை சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் துரை (28), ஒண்டிப்புதூரைச் சோ்ந்த முருகன் மகன் செந்தில் (32), பொள்ளாச்சி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பெரியான் மகன் பிரபு (22), வெள்ளக்கோவிலைச் சோ்ந்த குமாா் மகன் செல்வகுமாா் (37) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
திருட்டுப் போன தாமிர கம்பிகள் முழுவதும் மீட்கப்பட்டன. பிடிபட்டவா்கள் அனைவரும் நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு தாராபுரம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

