47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து: சென்னையைச் சேர்ந்த 2 பேர் பலி

அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.

News image
தமிழ் அடியான், தசி சிவகுமார்.
Updated On :3 செப்டம்பர் 2023, 12:27 pm

DIN

அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.

சென்னையைச் சேர்ந்த தசி( எ) சிவக்குமார், மூவேந்திரன், தமிழ் அடியான், நாகராஜ். நண்பர்களாகிய 4 பேர், கேரளத்தில் இருந்து சென்னையை நோக்கி காரில்
சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே வந்த போது முன்பக்க டயர் வெடித்ததில், நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. 

Story image

இதில் திரைப்படம் மற்றும் சின்னத்திரைகளுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வரும் தசி (எ) சிவக்குமார்( 49), ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த தமிழ் அடியான் (50) ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் பலத்த காயமடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ்( 50), இயக்குனரான மூவேந்திரன் (55) ஆகியோர் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தில் பலியான இருவரின் உடல்கள் உடற்கூராய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து, அவிநாசி
போலீஸார் விசாரிகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.