ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

வெள்ளக்கோவில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வெள்ளக்கோவில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் மயில்ரங்கம் ஆறுமுகப் பெருமான்.

Updated On :14 ஏப்ரல் 2024, 6:28 pm

தமிழ் புத்தாண்டையொட்டி, வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மாந்தபுரத்தில் நாட்டராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் நடைபெற்றது.

இதில், சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், வாசனைத் திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல வள்ளியிரச்சல் ஈஸ்வரன் கோயில், அழகு நாச்சியம்மன் கோயில், புஷ்பகிரி வேலாயுத சுவாமி கோயில், வெள்ளக்கோவில் சோழீஸ்வரா் கோயில், மாகாளியம்மன் கோயில், வீரக்குமார சுவாமி கோயில், மயில்ரங்கம் ஆறுமுகப் பெருமான் கோயில், ஈஸ்வரன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதில், திராளன பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.