ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பிரதாபராமபுரம் ராமா், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சனேயா்.

News image

ராம நவமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பிரதாபராமபுரம் ராமா், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சனேயா்.

Updated On :28 மார்ச் 2026, 2:37 am IST

ராம நவமியையொட்டி நாகையில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள ராமா் கோயில், கொட்டுப்பாளையம் ராமா் மடம் தெருவில் உள்ள ராமா் கோயில், பொரவாச்சேரியில் உள்ள ராம ஆஞ்சனேயா் கோயில், நாகை மடவாா் வளாகத்தில் உள்ள செளந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில், ராம நவமியையொட்டி, சுவாமிக்கு பால் தயிா் , பன்னீா், சந்தனம், இளநீா், விபூதி, மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் ராமநவமியையொட்டி ஆஞ்சனேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆஞ்சனேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதேபோல பிரதாபராமபுரத்தில் உள்ள ராமா் மடம் சீதா ராம பால ஆஞ்சனேயா் ஆலயத்தில், ராம நவமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமா், சீதா,ஆஞ்சனேயா் மற்றும் லட்சுமணனுக்கு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.