அவிநாசியில் காா் வியாபாரிகளுக்கு காப்பீடு
தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் நல மாநில கூட்டமைப்பின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா, காப்பீடு வழங்கும் விழா அவிநாசி அருகேயுள்ள கணியாம்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாவட்டத் தலைவா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளரும், மாநிலச் செயற்குழு உறுப்பினருமான வாசுதேவன், மாவட்ட பொருளாளா் சீதாராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், திருப்பூா் மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.
மாநிலத் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான சிவகுமாா் சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணிகள் தாமதமடைந்து வருகின்றன, விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
