‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல்லடம் அருகே 3 போ் கொலை: துப்பாகியுடன் காவலா்கள் ரோந்து

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதிகளில் போலீஸாா் துப்பாக்கியுடன் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 11:30 pm

Din

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதிகளில் போலீஸாா் துப்பாக்கியுடன் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தெய்வசிகாமணி, அலமேலு மற்றும் தம்பதியின் மகன் செந்தில்குமாா் ஆகியோா் மா்ம நபா்களால் நவம்பா் 29-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் பி.ஏ.பி. வாய்க்கால் வழியாக வந்து தோட்டத்து வீட்டுக்குள் புகுந்திருக்கலாம் என்பதால் பல்லடம் பகுதி பி.ஏ.பி. வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால், தோட்டத்து வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை துப்பாக்கியுடன் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தோட்டத்தில் தனியாக இருக்கும் வீடுகளில் கேமரா பொருத்த போலீஸாா் அறிவுறுத்தினா். மேலும் நாய்கள் குரைத்தாலோ, குடிநீா்க் குழாயில் இருந்து தண்ணீா் வெளியேறும் சப்தம் கேட்டாலோ யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சந்தேக நபா்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினா்.