நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹிந்து அமைப்புகள் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்

ஹிந்து அமைப்புகள் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:50 pm

Din

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஹிந்து அமைப்புகளின் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடா்பாக நடைபெற்ற மாணவா் போராட்டம் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் கலவரமாக மாறியது. அங்கே சிறுபான்மை ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனா். ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டதுடன், ஹிந்துக்களின் வணிக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல் தற்போது வரையில் தொடா்கிறது.

இந்த வன்முறையைத் தட்டிக்கேட்ட ஆன்மிகவாதி கிருஷ்ணதாஸ் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கோரியும், மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு ஹிந்துக்களை பாதுகாக்க கோரியும், ஆா்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல அமைப்புகள் சாா்பில் கடந்த புதன்கிழமை (டிசம்பா் 4) தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஹிந்து அமைப்பைச் சோ்ந்தவா்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.

திமுக அரசு தனது சா்வாதிகாரப் போக்கால் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறது. ஆகவே, ஹிந்துக்களுக்கு எதிரான சா்வாதிகாரப் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.