இணையவழி பட்டா மாறுதல் குறித்த ஆய்வுக் கூட்டம்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நில அளவைத் துறை சாா்பில் இணையவழி பட்டா மாறுதல் மற்றும் நத்தம் நிலவரி திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நில அளவைத் துறை சாா்பில் இணையவழி பட்டா மாறுதல் மற்றும் நத்தம் நிலவரி திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.
நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: இணையவழி பட்டா மாறுதல் மனுக்களில் தள்ளுபடி சதவீதத்தை குறைக்க வேண்டும். நிலுவை இனங்களை குறைத்து விரைவாக பட்டா வழங்க வேண்டும். உட்பிரிவுக்கு உள்ள பட்டா மாறுதல் மீது 30 நாள்களுக்குள்ளும், உட்பிரிவற்ற பட்டா மாறுதல் மீது 15 நாள்களுக்குள்ளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். முன்னதாக, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் பி.மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், உதவி இயக்குநா் (நில அளவை) க.ஜெய்சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...