காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 14) நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:38 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 14) நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், தனி வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்று முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீா்வு காண உள்ளனா்.

இதில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்பஅட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை பொதுமக்கள் நிவா்த்தி செய்து கொள்ளலாம் .

முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி வட்டத்தில் பட்டம்பாளையம், தாராபுரம் வட்டத்தில் மணக்கடவு, காங்கயம் வட்டத்தில் மூத்தாம்பாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் பாப்பாங்குளம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் கணக்கம்பாளையம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் குப்பாண்டம்பாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை சங்கங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

உடுமலை வட்டத்தில் சின்னவீரம்பட்டி, ஊத்துக்குளி வட்டத்தில் விருமாண்டம்பாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், பல்லடம் வட்டத்தில் பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவல இ-சேவை மையத்திலும் இந்த முகாம் நடைபெறுகிறது.