4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீ

ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்தவா் சித்ராதேவி (44), கால்நடை கல்லூரி பேராசிரியை. இவா், தனது 2 குழந்தைகளுடன் கொடுமுடியில் இருந்து கோவைக்கு திங்கள்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா். காரை சித்ராதேவி ஓட்டி உள்ளாா். கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக குழந்தைகளுடன் காரை விட்டு, சித்ராதேவி இறங்கிய சில நொடிகளில் காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ஊத்துக்குளி தீயணைப்புத் துறையினா் காரில் பற்றிய தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து ஊத்துக்குளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.