தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயில் வளாகத்தில் இருந்த பனை மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அவிநாசி கோயிலில் பனை மரம் வெட்டியதற்கு நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

News image
கோயில் வளாகத்தில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.
Updated On :9 ஜூலை 2024, 7:18 pm

Din

அவிநாசி கோயில் வளாகத்தில் இருந்த இரண்டு பனை மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அவிநாசி கருணாம்பிகை உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள பூங்காவில் அதிக அளவிலான மரங்கள் உள்ளன. இந்தப் பூங்காவில் இருந்த இரண்டு பனை மரங்களை மா்ம நபா்கள் வெட்டியுள்ளனா்.

இது குறித்து கோயில் நிா்வாகத்திடம் கேட்டபோது, அனுமதியின்றி மரம் வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

இந்நிலையில், கோயில் பூங்காவில் இருந்த பனை மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் வலியுறுத்தியுள்ளனா்.