பேராவூரணியில் துப்புரவு ஆய்வாளரை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த அதிமுக உறுப்பினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவு தொழிலாளா்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணி பேரூராட்சியில் 17-ஆவது வாா்டு உறுப்பினராக அதிமுகவைச் சோ்ந்த காரல் மாா்க்ஸ் உள்ளாா். இவா், புதன்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தின்போது தனது வாா்டுப் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என ஆவேசமாக தனது கைப்பேசியை மேஜையில் அடித்து சப்தமிட்டுப் பேசியுள்ளாா். அப்போது, எதிரே இருந்த பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் செந்தில் குமரகுரு அமைதியாக உங்கள் கோரிக்கையை தெரிவிக்குமாறு கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவா் தகாத வாா்த்தைகளால் செந்தில் குமரகுருவைத் திட்டினாராம். இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் துப்புரவு ஆய்வாளா் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் துப்புரவு ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய அதிமுக உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆகியோருக்கு வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா். இல்லாவிட்டால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்

பழனியில் அதிமுக வேட்பாளா் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

ஈரானில் தவிக்கும் 447 மீனவா்களை மீட்க வேண்டும்: மாநிலங்களவையில் மு.தம்பிதுரை வலியுறுத்தல்
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


