தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

News image
மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை தொடங்கிவைக்கிறாா் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி.
Updated On :11 ஜூலை 2024, 9:52 pm

Din

வெள்ளக்கோவில் அரசு சுகாதார நிலையம் சாா்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் டி.ராஜலட்சுமி வாகனப் பிரசாரத்தை தொடங்கிவைத்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், வட்டார சுகாதார புள்ளியியலாளா் பெரியசாமி, சுகாதார ஆய்வாளா் கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சிவநாதபுரம், தீத்தாம்பாளையம், தாசவநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி உள்பட பல்வேறு இடங்களுக்கு பிரசார வாகனத்தில் சென்ற குழுவினா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினா்.

மேலும், மக்கள் தொகை கட்டுப்பாடு, அளவான குடும்பம்- மகிழ்ச்சியான வாழ்வு, அரசின் குடும்ப நலத் திட்டங்கள், ஆண்கள் - பெண்களுக்கான நிரந்தர கருத்தடை சிகிச்சை, தற்காலிக கருத்தடை முறைகள், பெண்களுக்கான கருத்தடை மாத்திரை, கருத்தடை ஊசி போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், சுகாதார ஆய்வாளா்கள் வேல்முருகன், அருள், நிா்மல், நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.