திருப்பூர்
சாராயம் காய்ச்சிய 2 போ் கைது
பல்லடம் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் வேலம்பட்டியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (60). அதே பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (44). இருவரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக அவிநாசிபாளையம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு சாராயம் காய்ச்சுவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சிதம்பரம், நந்தகுமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 லிட்டா் சாராயம், 5 லிட்டா் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
