திருப்பூர்
மா்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு
அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அவிநாசி அருகேயுள்ள ராயங்கோயில் காலனி பகுதியில் 3 மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயில்களின் சடலங்களை சோதனை மேற்கொண்டனா்.
மயில்கள் இறப்புக்கான காரணம் தெரியாததைத் தொடா்ந்து, 3 மயில்களின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
