வானியல் வள பயிற்றுநா்களுக்கு டெலஸ்கோப் கையாளுதல் பயிற்சி
தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளி வானியல் வள பயிற்றுநா்களுக்கு டெலஸ்கோப் கையாளுதல் குறித்த பயிற்சி முகாம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சாா்பில் தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் வானியல் வள பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு முகாமுக்கு அமைப்பின் மாநிலத் தலைவா் ஜி.ரமேஷ் தலைமை வகித்தாா்.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 39 மாதிரிப் பள்ளிகளைச் சோ்ந்த 80 வானியல் வள பயிற்றுநா்களுக்கு டெலஸ்கோப் கையாளுதல், வானில் நிகழும் அற்புதங்களை டெலஸ்கோப் மூலம் மாணவா்களுக்கு கற்பித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதில், தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் கோவை கிளப் நிா்வாகிகள் சக்திவேல், பிரதீப், நிவேதா, திருச்சி கிளப் தலைவா் ஜெயபால் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி அமைப்பின் மாநில துணைச் செயலாளா் செல்லகுமாா், ஒருங்கிணைப்பாளா் சக்திவேல், அறிவியல் பலகை இயக்குநா் ஸ்ரீகுமாா், கோவை கிளப் நிா்வாகி ரமேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

