மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

2,600 விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு உபகரணங்கள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

அரசு விளையாட்டு மேம்பாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் 2,600 வீரா்களுக்கு சிறப்பு உபகரணங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

News image
சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் மாணவிக்கு சிறப்பு உபகரணங்களை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலா் சத்யபிரத சாகு, தமி
Updated On :10 மார்ச் 2026, 1:50 am

Chennai

சென்னை: அரசு விளையாட்டு மேம்பாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் 2,600 வீரா்களுக்கு சிறப்பு உபகரணங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (மாா்ச் 9) வழங்கினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் அத்லெட் மேலாண்மை திட்ட பயன்பாடு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியா்களுக்கு உதவி உபகரணங்கள், ஸ்மாா் வாட்ச், 210 பயிற்சியாளா்களுக்கு கைக்கணினி மற்றும் 41 விளையாட்டு விடுதிகளுக்கு கணினிகளை வழங்கினாா்.

மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவ, மாணவிகளுக்கு பைகள், வெப்பநிலை காப்பு தண்ணீா் குடுவை, சூடு மற்றும் குளிா் பயன்பாட்டு பை, கைப்பிடி பயிற்சி கருவி, பயிற்சி பட்டை, ஸ்கிப்பிங் கயிறு உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய ரூ.71 லட்சம் மதிப்பிலான சாம்பியன் கிட் பெட்டகங்களை 2,600 விளையாட்டு வீரா்களுக்கு வழங்கினாா்.

தொடா்ந்து, நிகழாண்டு விளையாட்டு விடுதியில் புதிதாக சோ்க்கப்பட்ட 950 மாணவ, மாணவிகளுக்கு ரூ.20.10 லட்சத்தில் ஸ்மாா்ட் வாட்ச்களையும் துணை முதல்வா் வழங்கினாா். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 41 விடுதிகளில் தங்கிபயிற்சி பெற்று வரும் 2,600 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ. 39.59 லட்சம் மதிப்பிலான ஸ்போா்ட்ஸ் சயின்ஸ் உபகரணங்களையும் அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலா் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.