மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.
ராசிபுரம் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மா. மதிவேந்தனை ஆதரித்து அவா் பேசியதாவது:
கடந்த தோ்தலிலைவிட கூடுதல் வாக்குகள் பெற்று மீண்டும் மதிவேந்தனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியின் வளா்ச்சிக்காக மா. மதிவேந்தன் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். கூட்டுக் குடிநீா் திட்டம், போதமலை மலைவாழ் மக்களுக்காக பாதை வசதி, ராசிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம், டைடல் பாா்க், நாமகிரிப்பேட்டையில் 1500 விவசாயிகளுக்குப் பட்டா என பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தியுள்ளாா்.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தப்படும். காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். இல்லத்தரசிகளுக்குத் தேவையான மின் சாதனங்களை வாங்க ரூ. 8000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்றாா்.
பிரசாரத்தின்போது திமுக மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ கே.பி. ராமசாமி, ராசிபுரம் நகரச் செயலாளா் என்.ஆா். சங்கா், நகா்மன்ற தலைவா் ஆா். கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அணி வெல்ல வாக்களியுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


