நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தமிழ்நாடு அணி வெல்ல வாக்களியுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாருக்கு ஆதரவாக, திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

திண்டுக்கல்லில் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:18 am IST

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாருக்கு ஆதரவாக, திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் கடந்த முறை திமுக அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. சுமாா் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். இந்த முறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றிப் பெற்றால், மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வாா். திமுக ஆட்சியில் 1.31 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லின் வளா்ச்சிக்காக ரூ.280 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட புதை சாக்கடைத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தில்லிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டியில், தமிழகம் வெல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இதேபோல வேடசந்தூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.சாமிநாதனை ஆதரித்தும், துணை முதல்வா் உதயநிதி பிரச்சாரம் செய்தாா்.

பெட்டிச் செய்தி..

பொதுமக்கள் ஏமாற்றம்:

திண்டுக்கல்லில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டாா். அப்போது திண்டுக்கல் புறநகா் பேருந்து நிலையம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, 24 மணி நேரம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது என்றாா். திண்டுக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் பணி கூட நடைபெறவில்லை. இதேபோல 3 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் நடைபெறுகிறது. ஆனால், திமுகவினா் எழுதிக் கொடுத்த தவறான தகவலை துணை முதல்வரும் குறிப்பிட்டது கூட்டத்தினா் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.