தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
காங்கயம், தாராபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா்களை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காங்கயத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். காங்கயம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன், தாராபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் டி.இந்திராணி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டம் தொழிலாளா்கள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம். உழைப்புக்கும், தொழில் வளா்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் மாவட்டம். திருப்பூா் மாவட்டத்தின் வளா்ச்சி அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்றால் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். பாஜக கூட்டத்தை உள்ளே விட்டோம் என்றால் இந்த மாவட்டத்தின் வளா்ச்சியை அடியோடு கெடுத்து விடுவாா்கள்.
தொழில் வளா்ச்சி அதிகரிக்க வேண்டும். தொழிலாளா்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் திமுக ஆட்சி தொடர வேண்டும். திமுக ஆட்சியில் காங்கயம் தொகுதிக்கு உள்பட்ட காங்கயம் அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி தரப்பட்டுள்ளது. வட்டமலைக் கரை ஓடை அணைக்கு பிஏபி தண்ணீா் கொண்டு வரப்பட்டுள்ளது. காவரி ஆற்றில் வள்ளியரச்சல், மேட்டுப்பாளையத்துக்கு புதிய கூட்டு குடிநீா்த் திட்டம் கொண்டு வரப்பட்டடுள்ளது. சென்னிமலை ஒன்றியத்தில் 434 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.18 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளக்கோவில் நகரப் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி நிலையம், வாரச் சந்தை மேம்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவன்மலை மலைக் கோயிலுக்கு தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் மதிப்பில் காங்கேயம் காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தாசவநாயக்கன்பட்டியில் துணை சுகாதார நிலையம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, காங்கயம் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டு உள்ளது என்றாா்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காங்கயத்தில் இன்று துணை முதல்வா் உதயநிதி பிரசாரம்

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கும்! - உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சாதனை திட்டங்களை வீடுதோறும் சொல்லுங்கள்! - இளைஞர் அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

