4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

News image
திருப்பூரில் ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  தேமுதிகவினா்.
Updated On :25 ஜூன் 2024, 11:15 pm

Din

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு நியாயம் கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் திருப்பூரில் தேமுதிக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் விசைத்தறி குழந்தைவேல், வடக்கு மாவட்டச் செயலாளா் பிரசாத்குமாா், தெற்கு மாவட்டச் செயலாளா் ஆறுச்சாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிய முதல்வரைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.